Connect with us

இந்தியா

வொர்க் ப்ரம் ஹோம் முறையால் தொழில்துறையே கெட்டு போயுள்ளது: விப்ரோ தலைவர் ஆவேசம்..!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்திலும் சரி, அதன் பின்னும் சரி பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலையை கடைபிடித்து வருகின்றன என்றும் இன்னும் பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஒரு பல நிறுவனங்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என ஊழியர்களை கட்டாயப்படுத்திய போதிலும் இன்னும் சில நிறுவனங்களில் பாதி நாட்கள் வீட்டிலும் பாதி நாட்கள் அலுவலகத்தில் வந்து வேலை செய்யும் முறையையும் முழுமையாக வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையையும் கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் இருந்து வேலை செய்வது என்பது ஊழியர்களுக்கு பெரும் வசதியாக இருக்கிறது என்றும் டிராபிக் பிரச்சனை காரணமாக பல மணி நேரங்கள் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அந்த நேரம் மற்றும் போக்குவரத்துக்கான செலவு மிச்சப்படுகிறது என்றும் மன அழுத்தம் குறைகிறது என்றும் ஊழியர்களின் சார்பில் கூறப்படும் காரணங்களாக உள்ளன.

ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி அவர்கள் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் மனநிலையிலிருந்து அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வீட்டில் இருந்து வேலை செய்யும் கலாச்சாரம் என்பது ஊழியர்களுக்கு நெகிழ்வு தன்மையை கொடுக்கும் என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும் அலுவலகத்திற்கு வர தொடங்கினால் தான் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்றும் நிறுவனம் மேம்படுத்தப்படும் என்றும் குழுவாக இருந்து பணி செய்வதற்கு உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

Indian workers work longest compared to other countryபெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகும் வாரத்தில் சில நாட்கள் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளன என்றும் இது முழுமையாக அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும் முறையாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை தொடர்வதால் தொழில் துறையே கெட்டுப் போய் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் ஒரு நண்பரை தேடி அவருடன் நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும் நேரடியாக ஒரு நண்பரிடம் பழகுவதற்கு அதிக வித்தியாசம் இருக்கிறது என்று கூறிய பிரேம்ஜி கிட்டத்தட்ட வொர்க் ப்ரம் ஹோம் மற்றும் அலுவலகம் வந்து பணி செய்வது இதற்கு சமமானதாகும் என்றும் மக்கள் அலுவலகத்திற்கு வந்து ஒருவருடன் ஒருவர் இணைந்து பணிபுரிவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Indian workers work longest compared to other countryவிப்ரோ நிறுவனத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து வாரத்திற்கு மூன்று நாள் வீட்டில் இருந்து பணி செய்யும் முறை அமல்படுத்தப்படும் என்று ஊழியர்களை கேட்டுக் கொண்டது. இதன் காரணமாக ஊழியர்களுக்கு நெகிழ்வுத்தன்மை இருந்தாலும் தற்போது முழுமையாக அலுவலகம் வந்து பணி செய்ய வேண்டும் என விப்ரோ நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?