சினிமா
“காட்டேரி“ படத்தின் டீசர் வெளியீடு
டி.கே இயக்கியிருக்கும் படம் “காட்டேரி“. படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.இப்படம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் வைபவ் ஹீரோவாக நடிக்கச் சோனம் பஜ்வா, வரலட்சுமி, ஆத்மிகா, தெலுங்கு ஹீரோயின் மணாலி ரத்தோர் என 4 பேர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா உள்ளிட்டோரும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படம், காமெடி கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.என்.பிரசாத் இசையமைத்துள்ளார்.





















