தமிழ்நாடு
மே 7 முதல் டாஸ்மாக்-ல் மது விற்பனை.. தமிழக அரசு.. எவ்வளவு நேரம் தெரியுமா?

கொரோனா ஊரடங்கு 3.0 தளர்வுக்கு பிறகு மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக்கில் மது விறபனை தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கொரோனா பதிப்பு அதிகம் உள்ளதாக சீல் வைக்கப்பட்டுள்ள பகுதிகள் இல்லாமல், பிற பகுதிகளில் டாஸ்மாக் மே 7-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். கடைகள் முன்பு 5 நபர்களுக்கும் அதிகமாக கூட அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இன்று மத்திய அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிகளின் படி மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.





















