தமிழ்நாடு
மதுபானத்திற்கு தானியங்கி இயந்திரமா? என்னடா நடக்குது தமிழ்நாட்டில்?

தமிழ்நாட்டில் மதுபான விற்பனைக்கு என்றுமே குறை இருந்ததில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன், மதுவிலக்கை கொண்டு வருவோம் என திராவிட கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு நடப்பது என்னவோ வேறாக உள்ளது. மதுபானக் கடைகளை மூடச் சொன்னால், அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதோடு, திருமண விழா மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது குடிக்க தடை இல்லையாம். இவை எல்லாம் சமூகத்தை சீர்குலைக்கவே வழிவகுக்கிறது. இந்நிலையில் இப்போது, தானியங்கி மதுபானக் கடை வேறு வந்து விட்டதாம். இதையெல்லாம் ஒரு வளர்ச்சி என கொண்டாடுகின்றனர் அறிவிழந்தவர்கள்.
தானியங்கி மதுபானக் கடை
சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில், ஆட்கள் இன்றி தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தினை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஏ.டி.எம். இயந்திரம் போல செயல்பட்டு, மது மற்றும் பீர் வகைகளை விநியோகம் செய்ய பயன்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த இயந்திரத்தில் உள்ள தொடுதிரையின் உதவியுடன், தேவையான மதுபான வகையைத் தேர்வு செய்து, டெபிட் கார்டு அல்லது டெபிட் கிரெடிட் மூலம் பணத்தை செலுத்தினால், இயந்திரத்தில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கும் மதுபானம் தானாகவே வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.