இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

- டாஸ்மாக் கடைகளைத் தனியார் வசம் ஒப்படைக்க முடிவு. முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட பகுதிகளில் தனியார்மயமாக்கல் தொடங்கப்படும் – தமிழ்நாடு அரசு முடிவு.
- ரிலையன்ஸ் ஜியோ ஏர்டெல் மற்றம் வோடஃபோன் ஐடியா ஆகிய மன்னளி தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை சுமார் 12 வரை அடுத்த சில மாதங்களில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- டாஸ்மாக் மூலம் அரசின் வருவாயை அதிகரிக்க மது பானங்கள் மீது கூடுதல் வரி விதிக்க அரசு திட்டம். சுற்றுச்சூழல் மற்றும் சமூந நலத்துறை என்ற பெயரில் புதிய வரிமுறையை சேர்க்க முன்மொழிவு தாக்கல்.
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.150 உயர்ந்து கிராம் ரூ.13900க்கும் சவரன் ரூ.111200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுதியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி சுமார் 14000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வுதிய திட்டத்திற்கான ஆண்டு ஒதுக்கீடு ரூ.11000 கோடி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
- சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 15 நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு













