தமிழ்நாடு
#Breaking தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணில்லை 3,350 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளவர்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும், பெரும்பாலோனோர் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடையவர்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இன்று மொத்தம் 12,863 நபர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 527 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 2 நபர்கள் இறந்துள்ளனர்.
இன்றைய தேதி வரை கொரோனா வைரஸ் தொற்றுடன் 2,107 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2,662 நபர்கள் சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இன்று மொத்தம் 377 ஆண்களுக்கு, 150 பெண்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரையில் 2,392 ஆண்களுக்கும், 1,257 நபர்களுக்கும், ஒரு திருநங்கைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்னும் 1,62,970 நபர்களின் ரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.





















