தமிழ்நாடு
திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ..டிஆர். பாலு தேர்வு

சென்னை: திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவிக்கு டிஆர். பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவியை வகித்து வந்தார் துரைமுருகன். தற்போது இவர் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த பதவி காலியாக இருந்ததால் இன்று அதற்கான தேர்வு நடந்தது. இறுதியில் திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவி தற்போது டி.ஆர்.பாலுவிற்கு அளிக்கப்பட்டுள்ளது.
மூத்த உறுப்பினர் என்பதால் இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளது. க. அன்பழகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.



















