சினிமா
‘சூர்யா42’ பட்ஜெட் குறித்து பிரமித்த சூர்யா!

நடிகர் ‘சூர்யா42’ பட்ஜெட் குறித்து நடிகர் சூர்யா பிரமித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு அடுத்து நடிகர் சூர்யாவின் ‘சூர்யா42’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சிறுத்த’ சிவா இயக்கும் இந்தப் படத்தில் திஷா பட்டானி கதாநாயகியாக நடிக்கிறார். பத்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா ஐந்து கெட்டப்புகளில் நடிக்கிறார்.
ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பட்ஜெட் நடிகர் சூர்யா இதற்கு முன்பு நடித்திருந்த படங்களை விட மூன்று மடங்கு அதிகம் என இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். பான் இந்தியா படமான இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட 350 கோடிகள் ஆகும்.
தயாரிப்பாளர்களுக்கு அதிகம் செலவு வைக்காத ஒரு நடிகர் சூர்யா எனும்போது இவ்வளவு பெரிய பட்ஜெட் கேட்டு முதலில் பிரமித்து தயங்கியதாகவும் பின்பே ஒத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் டீசருக்கான ஷூட் எடுத்து முடித்துள்ள நிலையில், அடுத்த மாதம் 14ம் தேதி இது வெளியாக இருக்கிறது. படத்தின் புரோமோஷன்களுக்காக மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி செலவிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பீரியாடிக் ட்ராமாவாக உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.