சினிமா செய்திகள்
இணையத்தில் வெளியான ஐரா, சூப்பர் டீலக்ஸ்!

இப்போதெல்லாம் மூன்று நாட்கள் வசூல் போதவில்லை என்ற நிலை உருவாகியுள்ளததால், வியாழக் கிழமையே படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.
நேற்று வெளியான நயன்தாராவின் பேய் படமான ஐரா மற்றும் விஜய்சேதுபதி, சமந்தா நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்த செய்தியை அறிந்த இரண்டு படத் தயாரிப்பு நிறுவனங்களும் பயங்கர டென்ஷனில் உள்ளன. ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும், இந்த படத்தை இணையத்தில் வெளியிட தடை விதிப்பதாக ஐகோர்ட் உத்தரவிட்டாலும், படம் என்னவோ முதல் நாளே நல்ல ப்ரிண்டில் இணையதளங்களில் வெளியாகி வைரலாகின்றன.
நீதிமன்றத்தின் உத்தரவு, வெறும் அறிக்கையாகவே மாறி வருவதால், இந்த விவகாரத்தில், அரசும், நீதிமன்றமும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.





















