Connect with us

இந்தியா

ஸ்விக்கியில் சானிடரி பேட் ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்.. வைரல் டுவிட்!

Published

on

ஸ்விக்கியில் சானிட்டரி நாப்கின் ஆர்டர் செய்த பெண் ஒருவருக்கு ஆச்சரியம் காத்திருந்த நிலையில் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த ட்விட்டர் வைரல் ஆகி வருகிறது.

தற்போதைய டெக்னாலஜி காலத்தில் வீட்டில் இருந்து கொண்டே அனைத்து பொருள்களையும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வரவழைத்துக் கொள்ளும் முறை மக்களிடம் அதிகரித்து வருகிறது. தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் முதல் சாதாரண மளிகை பொருட்களை வரை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கு நேரடியாக டெலிவரி செய்யப்படுகிறது என்பது தெரிந்ததே.

அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் கிடைக்காத பொருளே இல்லை என்ற வகையில் அனைத்து பொருட்களும் கிடைப்பதால் பொதுமக்கள் ஷாப்பிங் செல்வதையே கிட்டத்தட்ட மறந்து விட்டார்கள் என்பது குறிப்பிடப்பட்டது. அது மட்டுமின்றி ஆன்லைனில் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்களை அவ்வப்போது நிறுவனங்கள் ஆச்சரியப்படுத்தி வருகிறது என்பதும் எதிர்பாராத பரிசுகளையும் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஆன்லைனில் சானிடரி நாப்கின் பேட் ஆர்டர் செய்த பெண் ஒருவருக்கு கொத்துக்கொத்தாக சாக்லேட்டுகள் கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துள்ளது. சமீரா என்ற பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பகிர்ந்துள்ளார். நான் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் சானிட்டரி பேட்களை ஆர்டர் செய்தேன். பார்சல் வந்ததும் பிரித்து பார்த்தபோது நாப்கின் அடியில் கொத்துக்கொத்தாக சாக்லேட்டுகள் இருந்ததை பார்த்தேன். அழகான சிந்தனை, ஆனால் இதை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை, ஸ்விக்கி நிறுவனமா? அல்லது கடைக்காரரா? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த ட்விட் வைரலாகி ஏராளமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகிறது. யாராக இருந்தாலும் இந்த செயல் பாராட்டக் கூடியது என்றும் விளம்பர நோக்கங்களுக்காக அடிக்கடி இலவசங்கள் வழங்குவதாக இருந்தாலும் வாடிக்கையாளர்களின் மனநிலை சாக்லேட்டுகளை பார்த்ததும் குஷி ஆகிவிடும் என்றும் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சின்னச்சின்ன பரிசுகள் அளிப்பதால் வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என்றும் நுகர்வோரை மகிழ்விப்பதற்கு தயாரிப்பாளர்கள் செய்யும் ஒரு சிறப்பான செயல் என்றும் இன்னொரு பயனர் தெரிவித்துள்ளார். இன்னொரு பெண் பயனர் நான் சானிடரி நாப்கின் ஆர்டர் செய்த போது பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?