டிவி
குஷ்பூ சீரியலுக்கு ‘நோ’ சொன்ன சன் டிவி… உதவிக்கரம் நீட்டும் நேஷனல் சேனல்..!

நடிகை குஷ்பூ-வின் பிரபல சீரியல் ஒன்றின் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பு செய்ய சன் டிவி மறுப்பு தெரிவித்துள்ளது.
நடிகை குஷ்பூ-வின் அவ்னி தயாரிப்பு நிறுவனம் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியின் ஒளிபரப்பான சீரியல் நந்தினி. பாம்பு கதை, பெரும் அரண்மனை செட், உயர் ரக காஷ்ட்யூம்கள் என ஹிந்தி சீரியல்களையே தூக்கி சாப்பிடும் வகையில் இந்த சீரியல் இருந்தது. சன் டிவியில் இது பெரிய ஹிட் சீரியல் கூட.

இதனால், நந்தினி சீரியலில் இரண்டாம் பாகத்தை தயாரிக்கத் தொடங்கி உள்ளார் குஷ்பூ. முதலில் சன் டிவி-யில் வெளியிடலாம் என்ற முடிவில் 50 எபிசோடுகள் வரையில் ஷீட்டிங் முடித்து வைத்துவிட்டாராம் குஷ்பூ. ஆனால், குஷ்பூவின் சீரியல்களுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாம் சன் டிவி. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த குஷ்பூவிடம் நேரடியாக வந்து கை கொடுத்துள்ளது ஜீ தமிழ்.
ஆக, ப்ரைம் நேரம் ஒன்றில் குஷ்பூவின் நந்தினி 2-ம் பாகம் சீரியல் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது.















