சினிமா
தளபதி 67 ஓடிடி உரிமத்தை தட்டித் தூக்கிய பிரபல நிறுவனம்; சாட்டிலைட் உரிமம் யாருக்கு தெரியுமா?

அப்டேட்களால் கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்களை குளிப்பாட்டி குஷிப்படுத்திக் கொண்டிருக்கிறது செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம். இந்நிலையில், இன்றைய ஹாட் அப்டேட்களாக சாட்டிலைட் உரிமம் மற்றும் ஓடிடி உரிமம் பற்றிய அப்டேட்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆரம்பத்திலேயே அதிக அப்டேட்களை விட்டு வரும் நிலையில், போக போக விஜய் ரசிகர்கள் கொடுக்கும் டார்ச்சருக்கு என்ன செய்ய போகின்றனோ என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

#image_title
நடிகர்கள் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மன்சூர் அலி கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. அதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் சமீபத்தில் தனி விமானத்தில் ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றனர். விமான நிலையத்தில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா இருக்கும் காட்சிகள் வெளியாகி இருந்தன.
நடிகர் விஜய்யின் சமீப கால படங்களை தொடர்ந்து வாங்கி ஒளிபரப்பி வரும் சன் டிவி தளபதி 67 படத்தின் சாட்டிலைட் உரிமத்தையும் படத்தின் ஷூட்டிங் கூட தொடங்காத நிலையில், பெரிய தொகைக்கு வாங்கி விட்டது. வாரிசு படத்தை சன் டிவி ஏப்ரல் மாதம் சிறப்பு திரைப்படமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title
மேலும், தளபதி 67 படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளது. அஜித்தின் ஏகே62 படத்தையும் இன்னமும் இயக்குநர் கூட கன்ஃபார்ம் ஆகாத நிலையில், வாங்கி போட்டு வைத்திருக்கிறது நெட்பிளிக்ஸ். இப்போவாவது டெலிகிராமில் டவுன்லோடு செய்து பார்க்காமல் ரசிகர்கள் நெட்பிளிக்ஸை சப்ஸ்கிரைப் செய்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!