சினிமா செய்திகள்
அரசியலில் குதிக்கின்றாரா நடிகை த்ரிஷா?

நடிகை த்ரிஷா அரசியலில் குதிக்கப் போவதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஒரு சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் த்ரிஷா தரப்பு இதை முற்றிலும் மறுத்துள்ளது.
நடிகைகள் அரசியலில் குதிப்பது தமிழகத்தில் புதிது இல்லை என்பது அனைவரும் தெரிந்ததே. நடிகைகள் குஷ்பு ரோஜா, விஜய் சாந்தி, குஷ்பு, குத்து ரம்யா, நக்மா, உட்பட பலர் தற்போது அரசியலில் உள்ளனர் என்பதும் ஒரு சிலர் பதவியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை த்ரிஷா அரசியலில் குதிக்க போவதாகவும் அவர் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் தங்களை தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் ஒரு சிலர் யூடியூப் வீடியோவின் மூலம் வதந்திகளை பரப்பி வருகின்றனர்..
ஆனால் த்ரிஷா தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. த்ரிஷாவுக்கு அரசியல் ஆர்வம் கிடையாது என்றும் இதுவரை த்ரிஷா எந்தவித அரசியலும் பேசியது இல்லை என்றும் அதனால் அவர் அரசியலில் குதிக்கப் போவதாக வெளிவந்தபோது செய்தி தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.
த்ரிஷா தற்போது திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் அவர் திருமணம் ஆகி குடும்பத்தில் செட்டில் ஆகத்தான் விரும்புகிறார் என்றும் அரசியலில் அவருக்கு எந்த விதமான எண்ணமும் இல்லை என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.