இந்தியா
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம்!

நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தமிழ்நாட்டி இருந்து நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்தான அறிவிப்பை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

#image_title
இந்த அறிவிப்பு வெளியான பிறகு செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பு, என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை எனக்கு அளித்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கும், அரசுக்கும் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்துக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை மகளிர் ஆணைய உறுப்பினராக நியமித்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போனில் வாழ்த்து கூறினார். அவருக்கு எனது நன்றி. அவர் மாநில தலைவராக மட்டுமல்லாமல் எனக்கு சகோதரனாக ஆதரவாக உள்ளார். இந்த பொறுப்பு காட்சி சார்ந்தது கிடையாது. இது தேசத்திற்கான பொறுப்பு. பெண்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுப்பேன் என்றார்.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்திலும் குஷ்புவுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட டுவிட்டில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவுக்கு பாஜக சார்பாக வாழ்த்துக்கள். இது அவரது இடைவிடாத முயற்சி மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான போராட்டத்திற்கான அங்கீகாரம் என கூறியுள்ளார்.