சினிமா செய்திகள்
சிம்புவின் அடுத்தப் படத்தின் பெயர் இது தானா?

சிம்பு நடிப்பில் அன்மையில் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தின் வெற்றிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் தெலுங்கு படம் ரீமேக் ஒன்றில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்திலும் இணைய உள்ளார்.
அதே நேரம் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படத்தின் பெயர் செக்கச் சிவந்த வானம் படத்தில் இவர் பேசிய ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்று கூறிய வசனம் தான் தலைப்பு என்று கூறப்படுகிறது.
மேலும் சிம்புவின் அடுத்தப் படத்தின் பெயர் ‘v’-ல் தொடங்கும் என்றும் டிவிட்டர் மூலம் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. மேலும் இந்தப் படத்தில் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் நாயகியான மேகா ஆகாஷ் சிம்புவின் ஜோடியாகிறார் என்பதும் முதல் பாடல் ஷூட்டிங் முடிந்துவிட்டது என்பதும் கூடுதல் தகவல்.




















