சினிமா செய்திகள்
வெந்து தணிந்தது காடு: சிம்புவின் அட்டகாசமான புதிய போஸ்டர்

சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சிம்பு நடித்து முடித்துள்ள ’மாநாடு’ திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பில் சிம்பு உள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்திற்காக சிம்பு மேலும் உடல் எடையை குறைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது. சிம்புவும் மேலும் ஒரு சிலரும் ஒரு சிறிய அறையில் கூட்டமாக உட்கார்ந்து இருப்பது போன்றும், சிம்பு ஆழ்ந்த யோசனையில் மற்றவர்கள் மொபைல் போனை பார்த்து கொண்டிருப்பது போன்றும் உள்ள இந்த போஸ்டர் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Here is the rustic 2nd Look of @VelsFilmIntl Productions @SilambarasanTR_'s #VendhuThanindhathuKaadu #VTKSecondLook ????@menongautham @arrahman @IshariKGanesh @rajeevan69 @jeyamohanwriter @utharamenon5 @siddharthcinema @editoranthony @Kavithamarai @Ashkum19 @kabilanchelliah pic.twitter.com/a1OX5l2wOM
— Vels Film International (@VelsFilmIntl) August 27, 2021















