சினிமா செய்திகள்
‘உங்க அத்தனைப் படத்துக்கும் தேசிய விருது கொடுத்திருக்கணும்’- பார்வதியைப் புகழும் சித்தார்த்!

‘உங்களுடைய அத்தனைப் படங்களுக்கும் தேசிய விருது கொடுத்திருக்கணும்’ என நடிகை பார்வதியை புகழ்ந்து பாராட்டி உள்ளார் நடிகர் சித்தார்த்.

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை பார்வதி ஆகியோர் சிறந்த நண்பர்களாகப் பல சமுக பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். தற்போது இவர்கள் இருவரும் விரைவில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள ‘நவரசா’ என்னும் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.
இருவரும் இணைந்து அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகை பார்வதியின் திறமையை மிகவும் பாராட்டி உள்ளார் சித்தார்த். சித்தார்த் கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளில் பார்வதி நடித்த அத்தனைப் படங்களையும் எடுத்துப் பாருங்க. எல்லா படத்துக்கும் விருது தரலாம். அத்தனைப் படத்துக்கும் தேசிய விருதே கொடுத்திருக்கணும். நம்ம ஊர்ல எல்லாத்தையும் கெடுத்து வச்சிருக்காங்க. பயங்கரமான நடிகை பார்வதி. இங்க நல்ல நடிகர்களுக்கு எல்லாம் விருது கொடுக்க மாட்டாங்க” எனப் பேசியுள்ளார்.
நடிகர் சித்தார்த் இந்தியன் 2, சைத்தான் கே பச்சா, டக்கர் ஆகிய படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார்.







