டிவி
சித்ராவின் தற்கொலைக்கு சீரியலில் வந்த அந்த காட்சிகள்தான் காரணமா?

சீரியல் நடிகை சித்ரா இறந்து 3 நாள் ஆகியுள்ள நிலையில், இன்று வரை தற்கொலைக்கான காரணம் என்னவென்று கண்டறியப்படவில்லை.
சித்ராவுக்கு அண்மையில் ஹேம்நாத் என்பவருடன் நிச்சயம் செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் நிச்சயத்திற்கு பிறகு, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகருடன் முத்தக் காட்சி வைக்கப்பட்டது.
தொடர்ந்து முதல் இரவு போன்ற காட்சிகளும் வைக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சித்ரா, ஹேம்நாத் இடையில் சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் தான் அவசர அவசரமாக இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பதிவுத் திருமணம் செய்ய என்ன காரணம் என்று சித்ராவின் தாயாருக்கு கோவம் வந்துவிட்டதாம். இதனால் இருவருக்கும் இடையில் என்ன செய்வது என்ற தெரியாமல் மன அழுத்தத்தில் சித்ரா இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மது போதையில் ஹேமநாத் சீரியலின் படப்பிடிப்பு சென்று பிரச்சனை செய்ததாகவும், பிரச்சனை முற்றவே மன அழுத்தம் தாங்க முடியாமல் சித்ரா தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மறுபக்கம் சித்ராவின் கணவர் ஹேமநாத்திடம் 3வது நாளாக நசரத்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.














