டிவி
கார் விபத்தில் சிக்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன்- சொந்தத் தங்கையின் நெகிழ்ச்சிப் பதிவு

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சரவணன் கார் விபத்தில் சிக்கி உள்ளார்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் வரும் 4 நான்கு அண்ணன் – தம்பிகளுள் கடைசி தம்பி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் சரவணன். சமீப நாட்களாக நடிகர் சரவணனின் ‘கண்ணன்’ கதாபாத்திரம் தான் சீரியலின் பிராதான நாயகனாக உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் தனது காதலியை திருமணம் செய்துகொள்கிறார். அண்ணன்களால் வீட்டைவிட்டேத் துரத்தப்பட்டுள்ள கண்ணன் தனது மனைவி உடன் எப்படி வாழப் போகிறார்? என சீரியல் ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் கண்ணன் ஆக நடிக்கும் சரவணன் கார் விபத்து ஒன்றில் சிக்கி உள்ளார்.
இந்த விபத்தில் பெரியதாக எந்தப் பாதிப்பும் இல்லை என்றாலும் ‘கண்ணன்’ சரவணனுக்கு காலில் நல்ல அடிபட்டுள்ளதாம். ஷூட்டிங் செல்லும் போது தான் இந்த கார் விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால், வலியை பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவிடம் இருந்து மறைத்து ஷூட்டிங் முழுவதும் முடித்துக் கொடுத்துள்ளார்.
இந்தத் தகவலை சரவணன் தங்கை சமுக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதிகப்படியான உடல் வலியால் தற்போது ஓய்வு எடுத்து வருகிறாராம் ‘கண்ணன்’ சரவணன்.





















