சினிமா
சித்ராவின் ‘முல்லை’ கேரக்டரில் நடிக்கப்போவது இவரா?

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, இரண்டு நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அவரின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வருவதனால், தமிழக காவல் துறை அது குறித்து தொடர்ச்சியாக விசாரித்து வருகிறது. இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்னும் நாடகத்தில் சித்ரா, முல்லை என்ற கேரக்டரில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனது. அவரது கேரக்டருக்காகவே பலரும் அந்த சீரியலைப் பார்த்து வந்தனர். அப்படி சித்ராவிற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்த்து வந்த ரசிகர்கள் மத்தியில் அவரின் இறப்புச் செய்தி பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது. சித்ராவின் இறப்பில் பல மர்ம முடிச்சிகள் இருப்பதனால், அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ரசிகர்கள் மேலும் மனமுடைந்து போயிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தொடர்ந்து ஷூட் செய்ய ஏதுவாக, முல்லை கேரக்டரில் யாரை நடிக்க வைத்தால் சரியாக இருக்கும் என்று விவாதிக்கப்பட்டு வருகிறதாம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி சித்ராவுக்கு பதிலாக ‘ஆயுத எழுத்து’ சீரியலில் நடித்த சரண்யா என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதே நேரத்தில் சித்ராவுக்கு பதிலாக வேறு யாரைப் போட்டாலும் முல்லை கேரக்டருக்கான கச்சிதமான நடிப்பு கிடைக்காது என்று ஒரு தரப்பினர் கருதுகிறார்கள்.

















