Connect with us

பங்கு சந்தை

1407 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்; ரத்தக்கண்ணீரில் முதலீட்டாளர்கள்!

Published

on

தொடர்ந்து 6 அமர்வுகளில் புதிய உச்சத்தைப் பதிவு செய்து வந்த மும்பை பங்குச்சந்தை திங்கட்கிழமை 1,407 புள்ளிகள் சரிந்தது முதலீட்டாளர்களின் கண்ணில் ரத்தக் கண்ணீரை வரச் செய்துள்ளது. இதில் என்ன முக்கியம் என்றால் அதிகம் சரிந்தது பெருநிறுவனங்கள் பங்குகள்.

இங்கிலாந்தில் உருவெடுத்துள்ள புதிய கொரோனா தொற்று, எப்போதும் இல்லாத அளவிற்கு நிப்டியில் குவிந்துள்ள முதலீடுகள் போன்றவையே பங்குச்சந்தை சரிவுக்கான காரணங்கள் என்று கூறுகின்றன. முழுமையான காரணங்கள் குறித்துப் பார்ப்பதற்கு முன்பாக இன்று பங்குச்சந்தை எவ்வளவு சரிந்துள்ளது என்று விளக்கமாகப் பார்க்கலாம்.

முன்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், 1,406.73 புள்ளிகள் என 3 சதவீதம் சரிந்து 45,533.96 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. மே 4-ம் தேதிக்குப் பிறகு இதுவே பங்குச்சந்தையில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும்.

மும்பை பங்குச்சந்தை போன்றே தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டியும் 432.15 புள்ளிகள் என 3.14 சதவீதம் சரிந்து 13,328.40 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

மும்பை பங்குச்சந்தையின் அனைத்து துறைகளும் சரிந்து சிவப்பாகவே காட்சி அளித்தன. இண்டஸ் இண்ட் வங்கி, மஹிந்தரா & மஹிந்தரா, எஸ்பிஐ, என்டிபிசி, ஐடிசி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பவர் கிரிட் பங்குகள் 6.98 சதவீதம் சரிந்தன.

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருந்த நிறுவனங்களின் முதலீடுகள் மொத்தமாக 6.59 லட்சம் கோடி ரூபாய் சரிந்து 178.79 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

ஐரோப்பிய சந்தைகளிலிருந்த முதலீடுகள் பாதுகாப்பு கருதித் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. எனவே வரும் நாட்களில் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது. இங்கிலாந்தில் புதிதாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மெனி, நெதர்லாந்து பெல்ஜியம், ஆஸ்ட்ரியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகள் இங்கிலாந்து விமான சேவையை நிறுத்தியுள்ளன. இந்தியாவும் இந்த அண்டு இறுதி அவரை இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்தைத் துண்டித்துள்ளது.

பங்குச்சந்தை சரிந்ததற்கான காரணங்கள்:

உருமாறிய கொவிட் தொற்று

கோவிட்-19 தொற்று புதிதாக உருமாறியதாக இங்கிலாந்து அறிவித்ததை அடுத்து உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.

விமான போக்குவரத்து நிறுவன பங்குகள்

விமான போக்குவரத்து சேவை துண்டிக்கப்படுவதால் இந்திய விமான போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் பங்குகள் 9.5 சதவீதம் சரிந்து 91.90 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. இண்டெர் குளோப் ஏவியேஷன் நிறுவனம் 6.4 சதவீதம் சரிந்து 1,543.90 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை சரிவு

புதிய கோவி தொற்றால் கச்சா எண்ணெய் தேவை குறையும் என்பதால், விலை திங்கட்கிழமை பேரலுக்கு 2 டாலை வரை சரிந்துள்ளது. இந்தியா அதிகளவில் வாங்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 2.06 டாலர் சரிந்துள்ளது. WTI கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.95 டாலர் சரிந்துள்ளது.

சர்வதேச மந்தநிலை

ஆசியாவின் பிற பங்குச்சந்தைகள் இன்று பிலாட்டகவே முடிந்துள்ளனர். அமெரிக்காவின் புதிய பொருளாதார சலுகை அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பும் இதற்கான காரணமாக உள்ளது. ஜப்பான் பங்குச்சந்தை 0.2 சதவீதம் சரிந்துள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?