வீடியோ
வெளியில் பார்க்க மனிதன்.. உள்ளே நாய்.. ‘நாய் சேகர்’ டீசர்!
Published
1 year agoon
By
Tamilarasu
காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகி வரும் நாய் சேகர் படத்தின் டீசர் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
அதில் மனிதனான சதீஷுக்கு நாய் குணமும், அவரின் நாய்க்கு மனித குணமும் ஆக மாறி விடுகிறது. அதன் பின்பு நடக்கும் காமெடி கலாட்டக்கல் தான் நாய் சேகர் படம்.
இது போல ஆங்கிலத்தில் பல்வேறு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. ஆணின் குணம் பெண்ணுக்கும், பெண்ணின் குணம் ஆணுக்கும் மாறிவிட்டால் என்ன ஆகும் என்பது போலக் கதை சொல்லப்பட்டு இருக்கும்.
நாய் சேகர் என்ற பெயர் வடிவேலு நடித்த தலைநகரம் படத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த பெயரில் வடுவேலுவும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் – ஒரிஜினல் என ஒரு படத்தில் நடித்து வருகிறார். எனவே நாய் சேகர் தலைப்பு யாருக்கு என்பதிலேயே கடுமையான போட்டி ஒன்று எழுந்தது.
நாய் சேகர் படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சதீஷ்க்கு ஜோடியாக பவித்ரா லக்ஷ்மி நடித்துள்ளார். இவர்களுடன் ஜார்ஜ் மரியான், லிவின்ஸ்டன், சிம்ரன், மனோ பாலா, கேபிஒய் பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். கிஷோர் ராஜ் குமார் இயக்கியுள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது.
You may like
-
நான் என்ன பண்ணிட்டேன்னு இப்படி தப்பா பேசுறீங்க; தர்ஷா குப்தா செல்லத்தை இப்படி அழ விட்டுட்டாங்களே!
-
என்ன கருமம் டா இது.. சன்னி லியோன் படத்தோட ப்ரமோவை பார்த்தாலே யாரும் தியேட்டருக்கு வரமாட்டாங்க போல!
-
இன்னும் 12 மணி நேரம் தான் உயிருடன் இருப்பேன்: நயன்தாரா
-
’பிசாசு 2’ படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மிஸ்கின்!
-
சன்னிலியோனின் ஐந்து மொழி திரைப்படம்: விஜய்சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட்லுக் போஸ்டர்!
-
தமிழக கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த நடிகர் சதீஷ்..! ட்விட்டரில் வைரலாகும் புகைப்படங்கள்…