சினிமா
பக்கா ஆக்ஷன்… பரபர சேஸிங்…பட்டைய கிளப்பும் வலிமை டிரெய்லர் வீடியோ….

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அஜித் ரசிகர்களிடையே இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படம் வருகிற பொங்களுக்கு வெளியாகவுள்ளது. இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் இப்படம் தொடர்பான பல விஷயங்கள் வெளியே வர துவங்கியுள்ளது. இப்படத்தின் 2 பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் விசில் தீம் இசை ஆகியவை ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் தொடர்பான புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகி அஜித் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த டிரெய்லர் வீடியோவில் பரபர பைக் சேஸிங் காட்சிகளும், ஆக்ஷன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. கண்டிப்பாக வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் என்பது நிச்சயம்.
டிரெய்லர் வீடியோவை பாருங்கள்.