Connect with us

தமிழ்நாடு

சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணம் இன்று தொடக்கம்: அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவும் திட்டம்!

Published

on

சசிகலாவின் ஒரு வாரம் அரசியல் சுற்றுப்பயணம் இன்று தொடங்குவதை அடுத்து அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை அதிமுக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சசிகலா இன்று ஒரு அரசியல் சுற்றுப்பயணத்தை செய்ய திட்டமிட்டுள்ளார். தென் மாநிலங்களில் அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் சசிகலா சற்றுமுன் தனது பயணத்தை தொடங்கிய நிலையில் அவரது வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் திரண்டு உள்ளனர் என்பதும் சசிகலாவின் கார் வீட்டிலிருந்து கிளம்பிய போது அதிமுக தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சுற்றுப்பயணத்தின் போது அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகளையும் அவர் நேரில் சந்திக்க உள்ளதாகவும் அதிமுகவை கைப்பற்றுவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது/ சசிகலாவின் அரசியல் சுற்றுப்பயணம் குறித்து கருத்து தெரிவித்த அதிமுக தொண்டர்கள் மறைந்த அம்மா அவர்களுக்கு நாங்கள் எவ்வாறு ஆதரவு கொடுத்தோமோ, அதேபோல் சின்னம்மா அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம் என்றும், நாங்கள சசிகலாவுக்கு எப்போதுமே உண்மையான விசுவாசியாக இருப்போம் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக கழக நிர்வாகிகள் ஆலோசனை செய்வார்கள் என்ற ஓபிஎஸ் அவர்களின் கருத்துக்கு பதில் கூறிய கேபி முனுசாமி, ‘கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் அவருக்கு ஆதரவான நிர்வாகிகள் பலரை ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து நீக்கி உள்ளனர் என்றும் எந்த சூழ்நிலையிலும் சசிகலாவை அதிமுகவில் சேர்ந்த வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஓபிஎஸ் குறித்து கருத்து கூறிய அதிமுகவின் கேபி முனுசாமி அவர்கள் அதிமுக தொண்டர் ஒருவர் இறந்து விட்டதாகவே கருதப்படுகிறது என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on economics. Under the getting. Ssc je recruitment 2024 apply online date, last date selection process.