சினிமா
விஜய் மட்டுமில்லை எல்லாருமே சூப்பர் ஸ்டார் தான்; அந்தர் பல்டி அடித்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் விஜய்யை சூப்பர்ஸ்டார் என பாராட்டி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் ரசிகர்கள் நடிகர் விஜய்யை சரத்குமார் எப்படி சூப்பர்ஸ்டார்னு சொல்லலாம் என ரம்மி விளம்பரத்தை வைத்து ஏகப்பட்ட ட்ரோல்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டனர்.
இந்நிலையில், சமீபத்தில் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் சரத்குமாரிடம் இந்த கேள்வி முன் வைக்கப்பட்டது. அப்போது நடிகர் சரத்குமார் அளித்துள்ள அடடே விளக்கம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
நடிகர் விஜய்யை நான் சூப்பர்ஸ்டார்னு சொன்னதில் எந்தவொரு தவறும் இல்லை. எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. அத்தனை பெரிய கூட்டத்திற்கு தலைவனாக இருக்கும் எந்தவொரு நடிகரும் சூப்பர்ஸ்டார் தான்.
நான் ரஜினிகாந்தை சூப்பர்ஸ்டார் இல்லை என்று எப்போதுமே சொன்னதில்லை. ரஜினிகாந்தும் சூப்பர்ஸ்டார் தான், அஜித்தும் சூப்பர்ஸ்டார் தான் விஜய்யும் சூப்பர்ஸ்டார் தான் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் சூப்பர் ஸ்டார் தான் தெலுங்கு நடிகர் மகேஷ் பாவையும் சூப்பர்ஸ்டார் என்று தான் ரசிகர்களுக்கு அழைக்கின்றனர் என பேசி உள்ளார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.
பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்திருந்த சரத்குமார் இரண்டாம் பாகத்திலும் பெரிய சம்பவங்களை பண்ண காத்திருக்கிறார்.
வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளார் சரத்குமார், வரும் ஜனவரி 11ம் தேதி வெளியாக உள்ள அந்த படத்தை காண ஆவலுடன் காத்திருப்பதாக அந்த பேட்டியில் பேசி உள்ளார்.