சினிமா செய்திகள்
சந்தானத்தின் ஏ1 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
காமெடி நடிகராக இருந்து நாயகனாக உருமாறியுள்ள சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு 2 சமீபத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய காமெடி கமர்ஷியல் படத்துடன் இந்த மாதம் நம்மை சிரிக்க வைக்க வருகிறார் சந்தானம்.
வரும் ஜூலை 26ம் தேதி சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏ1 எனும் அக்யூஸ்ட் நம்பர் 1 திரைப்படம் வெளியாகிறது.
கே. ஜான்சன் எனும் அறிமுக இயக்குநர் இயக்கும் ஏ1 படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி தாரா அலிசா நடித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் சந்தானம் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் தான் ஏ1 படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கப்பட்டன. அதற்குள் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால், சந்தானத்தின் நடிப்பில் உருவாகி கிடப்பில் கிடக்கும் சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கணும், மன்னவன் வந்தானடி படங்கள் எல்லாம் எப்போது வெளி வரும் என்று தெரியவில்லை.