Connect with us

சினிமா செய்திகள்

ரூ.80 கோடியில் பண்ணை வீடு.. ரூ.100 கோடி அபார்ட்மெண்ட்.. சல்மான்கானின் நிகர சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?

Published

on

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான்கானுக்கு 80 கோடி ரூபாய் பண்ணை வீடு மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கடற்கரை அருகே உள்ள அப்பார்ட்மெண்ட் வீடு ஆகியவை சேர்த்து அவருக்கு மொத்தம் 3,000 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சல்மான் கான் கடந்த 1999 ஆம் ஆண்டு ’மைனே பியார் கியா’ என்ற படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு அவர் பல வெற்றிப் படங்களை கொடுத்தார். அவர் நடித்த ’ஹம் ஆப்கே ஹைன் கோன்’ என்ற திரைப்படம் வருட காலத்தில் மும்பையில் உள்ள ஒரு தியேட்டரில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சல்மான்கானின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவருக்கு மொத்தம் சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மூலம் அவர் 200 கோடி ரூபாய் பெற்று வருவதாகவும் ஒரு படத்திற்கு அவர் 200 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அவரது படங்கள் வசூலில் சாதனை செய்து வருகின்றன என்பதும் அதனால் அவருக்கு சம்பளத்தை அள்ளி கொடுக்க பாலிவுட் தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான சல்மான்கான் வைத்திருக்கும் விலை உயர்ந்த பொருட்களின் விவரங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன. சல்மான் கான் மும்பையில் உள்ள பந்த்ரா கேலக்ஸி என்ற பகுதியில் குடியிருந்து வருகிறார். அவர் குடியிருக்கும் சொத்தின் மதிப்பு 100 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் அவர் அடிக்கடி தனது பண்ணை வீட்டுக்கு செல்வார் என்றும் 150 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள அந்த பண்ணை வீட்டின் சொத்து மதிப்பு 80 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இந்த பண்ணை வீட்டில் ஒரு ஆடம்பரமான உடற்பயிற்சிக்கூடம், ஆடம்பரமான நீச்சல் குளம் உள்பட பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் துபாயில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா கட்டிடத்தின் அருகில் சல்மான் கானுக்கு சொந்த வீடு உள்ளது. 5 படுக்கை அறை கொண்ட இந்த சொத்தின் மதிப்பு பல கோடி என்று கூறப்படுகிறது.

மேலும் சல்மான்கான் ரூ.2.26 கோடி மதிப்புள்ள லேண்ட்ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக், ரூ.1.80 கோடி மதிப்புள்ள டொயோட்டா லேண்ட் க்ரூஸர் உள்பட பல விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளார்.அவரது அறக்கட்டளையின் சொத்து மதிப்பு மட்டும் 325 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ.3000 கோடி என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த 3000 கோடி சொத்துக்களை அனுபவிக்க அவருக்கு மனைவி குடும்பம் குழந்தைகள் என்பது இல்லை என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாகும். சல்மான்கான் கடந்த 1999ஆம் ஆண்டு முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் டேட்டிங்கில் இருந்தார். அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் காத்ரினா கைப் உள்பட ஒரு சில நடிகைகளுடன் அவர் டேட்டிங்கில் இருந்தாலும் யாரையும் திருமணம் செய்யவில்லை. கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் ஒரு ரோமானிய நடிகையுடன் ரிலேஷன்ஷிப் இருந்தார் என்று கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. Sit amet consectetur. Link.