சினிமா செய்திகள்
சல்மான் கானின் பாரத் ட்ரெய்லர் ரிலீஸ்!
அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் சல்மான் கான் இளமை முதல் வயோதிக தோற்றம் வரை அசத்தலாக நடித்துள்ள பாரத் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக கேத்ரீனா கைஃப் நடித்துள்ளார். தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான், ஜீரோ படங்களில் இரண்டாம் நாயகியாக வலம் வந்த கேத்ரீனா கைஃப் இந்த படத்தில் சல்மானுக்கு ஜோடி சேர்ந்துள்ளார்.
உயிரை பணயம் வைத்து சர்கஸில் மோட்டார் பைக் ஓட்டுவதில் இருந்து, இந்திய கப்பல் படையில் வேலை செய்வது என பல பரிமாணங்களில் சல்மான் கான் அசத்தியுள்ளார்.
ஈகை திருநாள் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜூன் 5ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
















