வீடியோ
பாரத் படத்தின் ஸ்லோ மோஷன் டீஸர் ரிலீஸ்!

சல்மான் கான் நடிப்பில் வரும் ஈகை திருநாளில் வெளியாகவுள்ள பாரத் படத்தின் ஸ்லோ மோஷன் பாடல் டீஸர் தற்போது வெளியாகி இந்தியளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.
சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள பாரத் படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி யூடியூப் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில், பாரத் படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்லோ மோஷன் பாடல் டீஸர் வெளியாகி இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
இந்த பாடலில் சல்மான் கானுடன் பிரபல பாலிவுட் நடிகை திஷா படானி நடனமாடியுள்ளார்.
வரும் ஜூன் மாதம் 5ம் தேதி பாரத் படம் வெளியாகிறது.