சினிமா
பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகுகிறாரா குமரன்?

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து நடிகர் குமரன் விலகுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முக்கியமானது. டி.ஆர்.பியில் முன்னணியில் இருக்கிறது இந்த சீரியல். இந்த சீரியலுக்கும் அதன் கதாபாத்திரங்களுக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சீரியலில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

pandiyan stores kumaran
கதிர்-முல்லை ஜோடிக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏற்கனவே, முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா தொடங்கி காவ்யா வரை பலரும் மாறிய நிலையில் இப்போது முல்லை கதாபாத்திரத்தில் லாவண்யா நடித்து வருகிறார். இந்த நிலையில், அந்த சீரியலில் இருந்து குமரன் விலக இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘வதந்தி’ இணையத்தொடர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்போது , ‘மாயதோட்டா’ என்ற இணையத்தொடரிலும் இசட் பிரிவு சீஃப் செக்யூரிட்டி ஆஃபிசராக நடித்துள்ளார். சினிமாவைப் போலவே ஓடிடி தொடர்களுக்கும் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் அதில் அதிக கவனம் செலுத்த குமரன் திட்டமிட்டுள்ளார்.
இதனால், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து அவர் விலகுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், இதுகுறித்து குமரன் தரப்பில் தெளிவான விளக்கம் தரவில்லை.