சினிமா செய்திகள்
ரெளடி பேபி வீடியோ பாடல் ரிலீஸ்!
டிசம்பர் 21ம் தேதி வெளியான தனுஷின் மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ரெளடி பேபி வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர் மற்றும் டொவினோ தாமஸ் என பலர் நடிப்பில் வெளியான மாரி 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
யுவனின் இசையில் பிரபுதேவாவின் கொரியோகிராபியில் வெளியான ரெளடி பேபி டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும், இந்த பாடலில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி போடும் ஒவ்வொரு கடினமான ஸ்டெப்ஸையும் ரசிகர்கள் பயிற்சி செய்து பார்த்து வந்த வீடியோக்களும் வைரலாகின.
இந்நிலையில், இதன் முழு வீடியோ பாடலை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளது.

















