சினிமா செய்திகள்
அரசியல் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து எஸ்.ஏ.சி பின்வாங்கியதற்கு இவர்தான் காரணம்!

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பிக்க இருந்து கட்சியின் முடிவிலிருந்து, பின்வாங்கியதற்கு விஜய்யின் தாயார் ஷோபாதான் காரணமாம்.
எஸ்.ஏ.சந்திரசேகர் சில நாட்கள் முன் நடிகர் விஜய் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். உடனே அந்த கட்சிக்கும் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று விஜய் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
தொடர்ந்து விஜய்யின் தாயார் ஷோபாவும், கட்சியில் அவருக்கு வழங்கப்பட்டு இருந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சி தலைவராக நியமிக்கப்பட்ட ஏ.கே.ராஜாவும் விஜய் கொடுத்த அழுத்தத்தை அடுத்து விலகினார்.
பின்னர் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதிய எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் பெயரில் கட்சி தொடங்கப்பட்டது அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே கட்சியின் பெயரைப் பதிவு செய்ய வேண்டாம் என்று கடிதம் எழுதினார்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த திடீர் மனமாற்றத்துக்கு அவரது மனைவி ஷோபா தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. விஜய்யைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் செயலால் அதிருப்தி ஆன ஷோபா, தன் கணவருக்குக் கொடுத்த அழுத்தத்தின் காரணத்தால் தான் பின்வாங்கியதாகக் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

















