சினிமா
பெற்றோர்களின் 50வது ஆண்டு திருமண நாள் விழா.. அம்மாவுடன் தனியாக கொண்டாடிய விஜய்?

நடிகர் விஜய் தனது அம்மா அப்பாவின் 50வது ஆண்டு திருமண விழாவை கொண்டாடியதாக போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால், அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய்யும் அவரது அம்மா சோபாவும் மட்டுமே இருக்கின்றனர்.
புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட பலரும் பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் எங்கே விஜய்? என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

#image_title
அம்மா அப்பாவின் 50வது ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்திலேயே இருவரையும் பிரித்து விட்டாரா விஜய் என்றும் ட்ரோல்களும் பறக்கின்றன.
நடிகர் விஜய்க்கும் அவரது பெற்றோருக்கும் இடையே கருத்து வேறுபாடு சில ஆண்டுகளாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட அம்மா மற்றும் அப்பாவை படத்தின் டைட்டிலுக்காக பெயருக்காக அழைத்த விஜய் அவர்களை அரவணைக்கவோ ஒரு பொருட்டாகவோ மதிக்கவில்லை என விமர்சிக்கப்பட்டது.
அம்மாவை கூட அந்த ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் கண்டுக்கொள்ளாமல் சென்றார் விஜய் என வீடியோ க்ளிப்களை நெட்டிசன்கள் வைரலாக்கினார்.
இந்நிலையில், அம்மாவுடன் நடிகர் விஜய் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளன. ஒரு வழியாக அம்மாவின் ஏக்கத்தை நடிகர் விஜய் போக்கி உள்ளார் என்றும் கூடிய சீக்கிரமே அப்பாவுடனும் அவர் முன்பு போல சேர்ந்து விடுவார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் விஜய் அதே லுக்கில் தனது அம்மாவுடன் புகைப்படத்தை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.