சினிமா செய்திகள்
100% ஒற்றுமையான தம்பதி உலகில் யாருமே இல்லை: தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு எஸ்.ஏ.சி அறிவுரை

100% ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் தம்பதிகள் உலகில் யாருமே இல்லை என்றும் அதனை மனதில் வைத்து கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்றும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிக்கு விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏசந்திரசேகர் அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வீடியோ ஒன்றில் கூறியபோது, ‘இன்று காலை நான் கேள்விப்பட்ட விஷயம் பொய்யாக இருக்க வேண்டும் அல்லது கனவாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
கணவன் மனைவி என்றால் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். 100% ஒற்றுமையாக இந்த உலகில் யாருமே வாழ முடியாது. பிரச்சினைகளை சந்தித்து வாழவேண்டும். பிரச்சனைகளே இல்லை என்றால் அது வாழ்க்கையே இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஒரு பொருளை எங்கு தொலைத்தோமோ, அங்கு தான் தேட வேண்டும். திநகரில் பர்ஸை தொலைத்துவிட்டு திருவல்லிக்கேணியில் தேடக்கூடாது என்றும் அதுபோல் பிரச்சனை எங்கு இருக்கிறதோ அங்கு போய் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிக்கு எஸ்.ஏ சந்திரசேகர் கூறிய அறிவுரையின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.