சினிமா செய்திகள்
மாஸ்டர் படத்திற்கு அதிகாலை சிறப்புக் காட்சி உண்டா? அமைச்சர் கடம்பூர் ராஜு பதில் என்ன?

மாஸ்டர் படம் திரை அரங்கில் வெளியாகும் போது அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு திரை அரங்குகள் திறக்கப்பட்டாலும் இதுவரையில் பெரும் நடிகர்களின் படம் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திரைக்கு வரும் பெரும் நடிகர்களின் படத்தில் மாஸ்டர் தான் முதல் இடத்தில் உள்ளது.
பொதுவாக விஜய், அஜித், ரஜினி, கமல் என பெரும் நடிகர்களின் படங்கள் திரைக்கு வரும்போது அதிகாலை காட்சி திரையிடப்படும். ஆனால் இது கோரோனா காலம் என்பதால் சிறப்புக் காட்சி அளிக்கப்படுமா என்று அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
பத்திரிக்கையாளர்களின் இந்த கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், “மாஸ்டர் திரைப்பட குழுவினரிடம் இருந்து அதிகாலை சிறப்புக் காட்சிக்குக் கோரிக்கை வைக்கப்பட்டால், அது பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாஸ்டர் படம் பொங்கலுக்குத் திரைக்கு வரும் போது, 75 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கடம்பூர் ராஜு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மாஸ்டர் படம் சிறப்புக் காட்சி குறித்து முக்கிய அறிவிப்பு கொடுத்துள்ளார்.
மாஸ்டர் படம் பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஜனவரி 13-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















