Connect with us

சினிமா செய்திகள்

ஷங்கர் உதவியாளர் இயக்கத்தில் நடிக்கின்றாரா ரஜினி?

Published

on

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் இயக்கும் ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கி உள்ள ’அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து அவர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி கேஎஸ் ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ் உள்பட ஒரு சில இயக்குனர்கள் ரஜினியின் படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் பிரபு என்பவர் ரஜினிக்காக ஒரு கதை வைத்திருப்பதாகவும் அந்த கதையை அவர் ரஜினியிடம் கூறி விட்டால் கண்டிப்பாக அடுத்த படம் இந்த படம்தான் என்றும் கூறப்பட்டு வருகிறது. கே பாலச்சந்தர் இயக்கிய ’தில்லு முல்லு’ படம் போல் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சம் கொண்ட படம் என்றும் ரஜினியும் முழு ஒரு முழு நீள நகைச்சுவை படம் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த படத்தின் கதையை கேட்டால் அவர் கண்டிப்பாக நடிக்க ஒப்புக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இருந்து ரஜினிகாந்த் வந்ததும் அவரை நேரில் சந்தித்து கதையைச் சொல்ல பிரபு காத்திருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு ரஜினி படத்தை இயக்கும் அதிர்ஷ்டம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?