சினிமா செய்திகள்
அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி? கஸ்தூரி சந்தேகத்தை தீர்த்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார் என்பதும், அவர் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்தது என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்வதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்ற நிலையில் ரஜினிக்கு மட்டும் எப்படி அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது என்ற கேள்வியை நடிகை கஸ்தூரி எழுப்பியிருந்தார்
மேலும் இந்தியாவில் சிகிச்சை பெற முடியாத அளவுக்கு அவருடைய உடலுக்கு என்ன ஆனது என்ற கவலையும் தனக்கு இருப்பதாகவும் அரசியலுக்கு வருவதை தவிர்த்ததற்கும் அவர் அமெரிக்கா செல்வதற்கும் தொடர்பு இருப்பதாக நினைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என்றும் கஸ்தூரி கூறியிருந்தார்.
கஸ்தூரியின் இந்த கேள்விக்கு ரஜினி ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்த நிலையில் தற்போது ரஜினி தரப்பிலிருந்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள்.
ஆச்சரியம் கலந்த நன்றி !
நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது.
என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது.
நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன்.
பூரண நலமுடன் புது பொலிவுடன்
‘தலைவரை’ வரவேற்க தயாராகட்டும் தமிழகம்
அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள்.
ஆச்சரியம் கலந்த நன்றி !
நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது.
என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது.
நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன்.
பூரண நலமுடன் புது பொலிவுடன்
'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம் ! #Rajinikanth #Annathe— Kasturi Shankar (@KasthuriShankar) June 29, 2021




















