சினிமா செய்திகள்
ரஜினியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா: வைரல் புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் ரஜினி மற்றும் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது ’அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ரஜினி – குஷ்பூ, ரஜினி – மீனா, ரஜினி – கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் ரஜினி – நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத்துக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் நயன்தாரா சென்றுள்ளார். விமான நிலையத்தில் இருந்து அவர் இறங்கி நடந்து வரும் காட்சிகளில் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
இன்னும் ஓரிரு நாட்கள் ரஜினி – நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அத்துடன் ரஜினி சம்பந்தப்பட்ட முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடுவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், டி இமான் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



















