தமிழ்நாடு
10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஹால் டிக்கெட் எப்போது கிடைக்கும்: தேர்வுத்துறை தகவல்

தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உறுதி என்ற நிலையில் அதற்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளும் தேதி குறித்த அறிவிப்பு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பது தெரிந்ததே .
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதியும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ஆம் தேதியும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6-ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்குகிறது .
இந்த நிலையில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்குரிய ஹால் டிக்கெட்டை நாளை முதல் தேர்வுத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது .
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை ஏப்ரல் 20ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





















