சினிமா செய்திகள்
பிக்பாஸ் பிரியங்கா விவாகரத்து செய்துவிட்டாரா? அவரே கூறிய பதில்!

பிக்பாஸ் வீட்டில் மற்றும் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியிலும், பிரியங்கா தனது கணவர் குறித்து இதுவரை எதுவுமே பேசாததால் அவர் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டதாக வதந்திகள் வெளியானதற்கு பிரியங்கா விரைவில் விளக்கம் அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் ப்ரியங்கா பிக்பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்த போதிலும் தனது கணவர் குறித்து சக போட்டியாளர்களிடம் எதுவுமே கூறவில்லை. அதுமட்டுமின்றி கடந்து வந்த பாதை டாஸ்க்கிலும் அவர் கணவர் பிரவீன் எதுவும் கூறவில்லை.
இந்த நிலையில் பிரியங்காவும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அவர்கள் இருவரும் பிரிய போவதாகவும் விவாகரத்து பெற போவதாகவும் வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரியங்கா ரசிகர்களுடன் நேரலையில் உரையாடிய நிகழ்ச்சியில் பல ரசிகர்கள் அவரது கணவர் குறித்த கேள்வியை கேட்டனர். ஆனால் தற்போதைக்கு பர்சனல் கேள்விகள் எதுவும் வேண்டாம் என்று அந்த கேள்விகளுக்கு பதில் கூற மறுத்த பிரியங்கா, ஆனால் அதே நேரத்தில் தனது கணவர் குறித்த முழு விவரங்களை விரைவில் தனியாக ஒரு வீடியோ வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ வெளியாகும்போது பிரியங்கா தனது கணவரை விவாகரத்து செய்தாரா அல்லது அவ்வாறு வெளிவந்திருக்கும் செய்தி முழுக்க முழுக்க வதந்தியா என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியங்காவின் கணவர் பிரவீன் விஜய் டிவியில் தான் பணி செய்து வருகிறார் என்பதும் அவர் சூப்பர் சிங்கர், பிக்பாஸ், பிக்பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தயாரிக்கும் குழுவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் பிரியங்காவுக்கு பிரவீனுக்கும் சந்திப்பு நிகழ்ந்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.














