இந்தியா
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

தமிழகத்தில் உள்ள 7 பட்டியலின உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் அழைப்பதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்த நிலையில் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 7 பட்டியலின உட்பிரிவுகளான குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
இந்த கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு சமீபத்தில் இதுகுறித்த மசோதாவை ஒன்றை கொண்டுவந்தது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், தேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், இந்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டமாகியுள்ளது என்றும் சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது.
















