தமிழ்நாடு
ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்ட அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த ரஃபேல் வாட்சு விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது ஏப்ரல் 14-ஆம் தேதி ரஃபேல் வாட்ச் பில்லோடு திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அண்ணாமலை கூறியிருந்தார். மேலும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்டுள்ளார்.

#image_title
இந்நிலையில் நேற்று காலை அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் DMK Files என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், சபரீசன் என குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
இதனையடுத்து இன்று பாஜக தலைமையகாமன கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் குறித்த விவரங்களை தெரிவித்தார். என்னுடைய ரஃபேல் வாட்ச் பெல் & ரோஸ் நிறுவனத்தினுடையது. இந்த வாட்சை தசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து பெல் & ரோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனம் ரஃபேல் விமானத்தை தயாரித்த ஃபிரெஞ்சு நிறுவனம்.
மொத்தமே தயாரிக்கப்பட்ட 500 வாட்சுகளில் 147-வது வாட்ச் ஆகும் இது. நான் இந்த வாட்சை 2021-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் தேதி சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். இந்த வாட்சை இனிமேல் யாரும் வாங்கமுடியாது, இந்த வாட்ச் தற்போது மார்க்கெட்டில் இல்லை என்றார் அண்ணாமலை.


















