தமிழ்நாடு
திமுக இளவரசராக உதயநிதி மாறிவிட்டார்: தாராபுரத்தில் பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகை தந்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் மோடி தாராபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். அதில் அவர் பேசியதாவது:
காங்கிரஸ் திமுக கட்சிகள் தங்களது தலைவர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் பெண்களை அவமதிப்பதை தமிழக மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கூறினார். சமீபத்தில் ஆ ராசா உள்ளிட்டோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 33 லட்சம் பெண்கள் மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் மூலம் இலவச கேஸ் சிலிண்டர் இடம்பெற்றுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, எங்கள் நோக்கம் வளர்ச்சி என்றும் காங்கிரஸ் திமுகவின் நோக்கம் குடும்ப அரசியல் என்றும் கூறினார்.
வெற்றிவேல் வீரவேல் என்று கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி ’தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என்றும் உலகின் தொன்மையான மொழியான தமிழில் ஓரிரு வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் திமுக இளவரசராக உதயநிதி மாறிவிட்டார் என்றும் அவர் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி முன்னணித் தலைவராக மாறி உள்ளார் என்று கூறிய பிரதமர் மோடி, 1989 மார்ச் 25ஆம் தேதி சட்டசபையில் ஜெயலலிதாவை திமுகவினர் தாக்கியதை மறக்கக்கூடாது என்றும் கூறினார். திமுக, காங்கிரஸ், திரிணாமுல் ஆகிய கட்சிகள் பெண்களுக்கு எதிரானவை என்றும் அவர் தெரிவித்தார்.


















