இந்தியா
என் வாழ்நாள் முழுவதும் நான் மாணவனாக இருக்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு!

குஜராத் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காந்தி நகரில் உள்ள அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி உரையாற்றினார்.
புதிய கல்விக் கொள்கை
பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், மாணவர்களுக்கு முன்னதாக புத்தக அறிவை கொடுத்து வந்தோம். புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, அந்த நிலைமை மாறும். குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். புதிய கல்விக் கொள்கையில் அதற்கான அனைத்து அம்சங்களும் இருக்கிறது.
மாணவனாக இருக்கிறேன்
என்னுடைய வாழ்நாளில் நான் ஆசிரியராக பண புரிந்ததில்லை. ஆனால், வாழ்நாள் முழுவதிலும் சமூக சூழ்நிலைகளை மிக நுணுக்கமாக படிக்கும் மாணவனாக இருக்கிறேன். உலகத் தலைவர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் அவர்களில் சிலர், அவர்களுடைய ஆசிரியர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர். இது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய செய்தி ஆகும். நம் நாட்டில் தரம் வாய்ந்த பல ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர் என பிரதமர் மோடி கூறினார்.
புதிய கல்விக் கொள்கையை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த உரை, மாணவர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.