Connect with us

இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலி: எல்லையில் பாக் ராணுவம் தாக்குதல் – 3 இந்தியர்கள் உயிரிழப்பு

Published

on

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. மே 6 ஆம் தேதி இரவு, ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LoC) மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல், மே 22ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை ‘தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றது.

இதனைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைத் துல்லியமாக குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் தரப்பில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் எந்தவொரு முறையிலும் குறிவைக்கப்படவில்லை என்றும், ஒழுங்குமுறையுடனும் துல்லியத்துடனும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்திய ராணுவம் இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி அளித்து வருகிறது.

பாகிஸ்தான் வீரர்கள் கடந்த 15 நாட்களாக சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தி இந்திய நிலைகளை குறிவைத்துதான் வந்தனர். ஆனால் தற்போது பீரங்கி தாக்குதலாக மாற்றி, ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா காட்டி, ஷாபூர், மன்கோட் பகுதிகள் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் லாம், மஞ்சகோட், கம்பீர் பிராமணா ஆகிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.

உரி மற்றும் தங்தார் துறைகளிலும் பீரங்கி குண்டுகள் வீசப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாக இந்திய ராணுவம் எக்ஸ் பதிவில் உறுதி செய்துள்ளது.

    J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

    இந்தியா2 மணி நேரங்கள் ago

    இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

    இந்தியா3 மணி நேரங்கள் ago

    தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

    இந்தியா3 மணி நேரங்கள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

    இந்தியா24 மணி நேரங்கள் ago

    இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

    இந்தியா24 மணி நேரங்கள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

    இந்தியா1 நாள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

    இந்தியா1 நாள் ago

    தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

    இந்தியா2 நாட்கள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

    இந்தியா2 நாட்கள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

    இந்தியா3 நாட்கள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

    Translate »
    Pifteau henri biolinker.