இந்தியா
‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த 10 முக்கிய அம்சங்கள் – இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்!

புதுடெல்லி:
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” எனும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பத்திரிகையாளர்களிடம் 10 முக்கிய அம்சங்களை விளக்கியுள்ளார்:
பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த ஒன்பது முகாம்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன.
துல்லியமான தொழில்நுட்ப ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
பாகிஸ்தான் ராணுவ நிலைகள் தாக்கப்படவில்லை; சுத்தமாக பயங்கரவாத முகாம்கள் மட்டும் குறிவைக்கப்பட்டன.
இந்திய ராணுவம் தாக்கிய இடங்கள் தொடர்பான வரைபடங்கள் மற்றும் வீடியோக்கள் ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ளன.
பயங்கரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த முகாம்கள் சுட்டெடுத்து அழிக்கப்பட்டன.
லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய தலைமையகங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ள ஆதாரங்கள், பஹல்காம் தாக்குதல் விசாரணையின் மூலம் வெளிப்பட்டுள்ளன.
சர்வதேச தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு, நிதி மற்றும் ஆதரவளிக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் மிகவும் கொடூரமானது என்பதையும், அதற்கு நேரடி பதிலடி அவசியம் என்பதை இந்தியா உணர்ந்தது.
பாக். பயங்கரவாதிகள் மீண்டும் எல்லை தாண்டும் தாக்குதலுக்கு முயல்வார்கள் என உளவுத்துறையினர் எச்சரித்ததுதான், இந்த நடவடிக்கையை தொடக்க காரணமாக அமைந்தது.
இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் தீவிரவாத ஒழிப்புக்கு எடுத்த முக்கியமான முன்னேற்றமாகவும், பாதுகாப்பு துறையில் உள்ள சீரான கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.
