இந்தியா
“எப்டிடா கஷ்டப்பட்டு சம்பாதிக்குற பணம் மாசம் மாசம் பத்தாயிரம் ரூபா காணாம போகுது

“எப்டிடா கஷ்டப்பட்டு சம்பாதிக்குற பணம் மாசம் மாசம் பத்தாயிரம் ரூபா காணாம போகுது னு பாத்தா … அத ஒருத்தன் திருடல …. நூறு நூறு ரூபாவா நூறு பேரு திருடுறான்.”
“வேலைக்காரன்” 2017 ல release ஆச்சி. அப்போ நான் படிச்சிட்டு இருந்தேன். இந்த dialogue ஓட meaning புரிஞ்சாலும் அதோட depth இப்போ தான் நல்லா புரிது.
நமக்கு தேவை இல்லாத பொருள தேவை இருக்குனு நம்ப வெச்சி வித்துட்டு இருக்கானுங்க. நாமலும் நம்ம தேவை என்னன்னே புரிஞ்சிக்காம வாங்கிட்டு இருக்கோம்.
Business ல ஒரு basic rule இருக்கு. நம்ம ஒரு product உருவாக்கனும் னா அதுக்கு முன்னாடி ஒரு பொதுவான பிரச்சினைய கண்டுபுடிக்கனும். அந்த பிரச்சினைக்கு solution அ தான் நம்ம product அ உருவாக்கனும். இத Pain-Point Driven Innovation னு சொல்லுவாங்க. உதாரணமா சொல்ல போனா மூட்ட பூச்சி தொல்லை என்ற ஒரு பொதுவான பிரச்சினை மக்களுக்கு இருக்குனு தெரிஞ்சிக்கிட்டு அத கொள்ளுற நவீன machine அ கண்டுபுடிச்சாரு வடிவேலு.
ஆனா இப்போ அப்டி இல்ல. ஒரு பொருள உருவாக்குறாங்க. அப்றோம் உங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கு, அதுக்கு நீங்க இத வாங்கி use பண்ணா சரியா போய்டும் னு நம்ப வைக்குறாங்க. எத சொன்னாலும் நம்புற நம்ம middle class ஜனம் அட ஆமா னு சொல்லி ஒடனே வாங்குறாங்க.
இப்போ last two years அ நீங்க வாங்குன பொருட்களோட ஒரு rough list எடுங்க. அதுல எது ஒரு தேவைக்காக நீங்க தேடி வாங்கின பொருள், எது பொருள பாத்து இத நாம இதுக்கு use பண்ணலாம் னு தேவைய create பண்ணி வாங்குன பொருள் னு categorize பண்ணி பாருங்க. கண்டிப்பா தேவைய உருவாக்குன பொருட்கள் தான் அதிகமா இருக்கும். எவனோ ஒருத்தன் அதுக்கு பின்னாடி இருந்து உங்களுக்கு இல்லாத ஒரு தேவைய உருவாக்கி இருக்கான். அதாவது இல்லாத பிரச்சினைய ஒரு marketing strategy னால உருவாக்கி இருக்கானுங்க.
அந்த மாசம் மாசம் நம்ம கிட்ட இருந்து காணாம போற பணம் நமக்கு இல்லாத பிரச்சினைய உருவாக்குறதுல நாமளே செலவு பண்றது தான் னு புரியும் போது ஒரு விதமான வலி உருவாகும். அது மொத்த middle-class கும் பொதுவான வலி.














