சினிமா செய்திகள்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை, எடப்பாடி போதும்: நடிகர் சரவணன்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை என்று நடிகர் சரவணம் கூறியுள்ளார்.
பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்து, அனைவராலும் சித்தப்பு என அன்புடன் அழைக்கப்படுபவர் சரவணன். பிக்பாஸில் இவர் கலந்துகொண்டு சர்ச்சையான கருத்தைக் கூறியது மூலம், போட்டியிலிருந்து என்ன காரணம் என்று கூறாமலே வெளியேற்றப்பட்டார்.
சேலத்தில் தென் இந்திய நாடக நடிகர்கள் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக வேட்டி, சேலை மற்றும் இனிப்பு வகைகளை வழங்கிய சரவணன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட சிறப்பான ஆட்சியை எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.
ரஜினிகாந்த் தன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரத் தேவையில்லை. நல்ல கருத்துக்களை மட்டும் கூறி வந்தால் போதும். அவர் வெளியில் அலைந்து அவரது உடல் நலத்தை கெடுத்துக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் ரஜினி படங்களைப் பார்த்து, அவரது ரசிகர் மன்றத்திலிருந்தவன். அவரை பார்த்துத் தான் படத்தில் நடிக்கச் சென்றேன் என்று சரவணம் கூறினார்.















