சினிமா
ஷாக்கிங்: கலக்கப் போவது யாரு டைட்டில் வின்னர் கோவை குணா காலமானார்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு அந்த சீசன் டைட்டிலையும் வென்ற கோவை குணா உடல்நலக்குறைவால் காலமானார்.
கலக்கப் போவது யாரு சீசன் 2வில் சிவகார்த்திகேயன் டைட்டில் வென்ற நிலையில், முதல் சீசனில் பங்கேற்று ரசிகர்களை சிரிக்க வைத்தவர் கோவை குணா.

#image_title
உடல்நலக்குறைவு காரணமாக கோவை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கோவை குணா சிகிச்சை பலனின்றி காலமானார்.
மதன் பாப் மற்றும் சின்னி ஜெயந்த் விஜய் டிவியில் இருந்து அப்படியே சன் டிவிக்கு வந்து ஆரம்பித்த அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜனகராஜ், லூசு மோகன், கவுண்டமணி உள்ளிட்ட பல ஜாம்பவான்களின் குரல்களில் மிமிக்ரி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்து வந்தவர் கோவை குணா.

#image_title
பல குரல் மன்னன் கோவை குணா என பட்டம் பெற்ற இவர், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்களையும் தமிழ் சினிமா ரசிகர்களையும் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கோவை குணாவின் காமெடி காட்சிகளை சோஷியல் மீடியாவில் வைரல் செய்து ரசிகர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.