Connect with us

சினிமா

சூர்யாவுக்கு குவியும் ஆதரவு – டிவிட்டரில் டிரெண்ட் ஆகும் #WeStandWithSuriya

Published

on

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.

மேலும், இப்படத்தை பொதுமக்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்த படத்தில் தோன்றும் இன்ஸ்பெக்டர் கேரக்டர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் போன்றும் வன்னியர் சமுதாயம் என்றாலே வன்முறையாளர்கள் என்பது போன்றும் ’ஜெய்பீம்’ படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பான அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு மிரட்டும் தொனியில் ஒரு கடிதம் எழுதினார். அதற்கு சூர்யா சரியான பதிலடியும் கொடுத்திருந்தார்.

இதையடுத்து, சூர்யா படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம், அவரை உதைப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு என்றெல்லாம் வன்னியர் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் #WeStandWithSuriya என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. சுமார் ஒரு லட்சம் பேருக்கும் மேல் இந்த ஹேஷ்டேக்கை டிவிட்டரில் பயன்படுத்தியுள்ளனர்.

twitter

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
me profile.